“அரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு சமமாக உள்ளன” கமல் ஹாசன் விமர்சனம்!

“அரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு சமமாக உள்ளன” கமல் ஹாசன் விமர்சனம்!

அரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு நிகராக உள்ளன என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் விமர்சித்துள்ளார்.

“அரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு சமமாக உள்ளன” கமல் ஹாசன் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் சீரமைப்போம்_தமிழகத்தை என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கான பல்வேறு மாவட்டங்களில் கமல் ஹாசன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தம், ஆம்பூரில் கமல் பரப்புரை செய்து வருகிறார்.

“அரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு சமமாக உள்ளன” கமல் ஹாசன் விமர்சனம்!

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தேர்தல் பரப்புரை செய்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன், “தமிழகம் ஒரு முக்கியமான அரசியல் திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் காணாமல் போய்விடும் என்று விமர்சகர்கள் சொல்ல சொல்ல நீங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை இன்னும் வளர்த்து கொண்டே இருக்கிறீர்கள். இங்கு கூடியிருப்பவர்கள் பிரியாணிக்காக கூடியவர்கள் அல்ல. இந்த கூட்டம் ஏமாற கூடாது என்றால், ஆர்வமுள்ளவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களாக சேருங்கள். நீங்கள் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக மாறினால் உங்களுக்கு நண்பர் வட்டாரம் பெருகும்.

“அரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு சமமாக உள்ளன” கமல் ஹாசன் விமர்சனம்!

அரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு நிகராக உள்ளன. மக்கள் எழுச்சியை மாற்றமாக மாற்றிக் காட்ட வேண்டும். இங்கு நடப்பது நேர்மைக்கும் மோசடிக்குமான போர். பொதுமக்கள் நேர்மையின் பக்கம் நிற்க வேண்டும். என் மீதான அன்பை கட்சிக்கான தொண்டாக மாற்றுங்கள். இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள். மக்கள் நீதி மய்ய கொடியை உயர்த்தி பிடியுங்கள்; நாளை நமதாகும் “என்றார்.