“விவேக் உடலுக்கு அரசு மரியாதை” தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

 

“விவேக் உடலுக்கு அரசு மரியாதை” தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக்கிற்கு அரசு மரியாதை வழங்க தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்த நிலையில் அவரது உடலுக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் கலைஞர்கள் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனது படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துக் கூறிய விவேக் நகைச்சுவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார் . நடிப்பு மட்டுமின்றி சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர், ஒரு கோடி மரங்களை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார் நடிகர் விவேக்கிற்கு 2009-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.அத்துடன் தமிழக அரசின் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் உள்ளிட்ட விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடிகர் விவேக் நடித்துள்ளார். இதை குறிப்பிட்டு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

“விவேக் உடலுக்கு அரசு மரியாதை” தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிப்பதற்கு அனுமதி தமிழக அரசு கேட்டுள்ளது. அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அனுமதி கேட்டு இருக்கிறது தமிழக அரசு. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆணையத்தின் அனுமதி அவசியம். இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் காவல் துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது தமிழக அரசு.