பிஎஃப் உள்ளிட்ட சிறுசேமிப்பு வட்டியை குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு!

 

பிஎஃப் உள்ளிட்ட சிறுசேமிப்பு வட்டியை குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு!

சிறுசேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட புதிய வட்டி விகிதம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது.

பிஎஃப் உள்ளிட்ட சிறுசேமிப்பு வட்டியை குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு!

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகளின் சேமிப்பு கணக்குகளின் வட்டிவிகிதம் 4% லிருந்து 3.5% ஆக குறைக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதம் 7.4% லிருந்து 6.5% ஆக குறைப்பு, ரெக்கரிங் டெபாசிட்டுக்கு 5.8% இல் இருந்து 5.3% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொது வருங்கால வைப்புநிதி என்று சொல்லப்படும் PPF வட்டிவிகிதம் 7.1%லிருந்து 6.4%ஆக குறைப்பு, ஓராண்டுகால வைப்புத்தொகைக்கான வட்டி 5.5% லிருந்து 4.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்தின் வைப்பு நிதி 6.9% இல் இருந்து 6.2% ஆக குறைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.