2வது நாளாக இயங்காத அரசு பேருந்துகள் : மக்கள் கடும் சிரமம்

 

2வது நாளாக இயங்காத அரசு பேருந்துகள் : மக்கள் கடும் சிரமம்

14வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2வது நாளாக இயங்காத அரசு பேருந்துகள் : மக்கள் கடும் சிரமம்

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன், 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2வது நாளாக இயங்காத அரசு பேருந்துகள் : மக்கள் கடும் சிரமம்

தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கத்தைவிட பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னையில் பெரிய அளவில் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரிகிறது.

சென்னையில் நேற்று 56% பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை என தொழிற்சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், காங்கேயம், தாராபுரம், பல்லடம், பழனி பனிமனைகளில் 100ற்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டுள்ளன. தொழில் நகரமான திருப்பூரில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படுவதால் தொழிலாளர்கள் சிரமப்படுவதாக கூறப்பட்டுள்ளது.