3-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் : மக்கள் அவதியால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு !

3-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் : மக்கள் அவதியால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு !

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

3-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் : மக்கள் அவதியால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு !

தமிழகம் முழுவதும் 3-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன், 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க கோரி தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களின் ஸ்டிரைக்கால் பேருந்துகள் வழக்கத்தைவிட மிக மிகக் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

3-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் : மக்கள் அவதியால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு !

இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நல ஆணையம் .மூன்றாம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பஸ் ஊழியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாலை 3 மணிக்கு துணை ஆணையர் லட்சுமிகாந்தன் 9 தொழிற்சங்கங்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

3-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் : மக்கள் அவதியால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு !

அத்துடன் புதுக்கோட்டையில் தனியார் பேருந்துகளில் மூன்று மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் குறைவாக அரசு பேருந்துகள் இயக்கப்படுவதை பயன்படுத்தி வசூல் செய்யப்படுவதாகபொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.