அரசு பஸ் கண்ணாடி உடைப்பு… மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தது கூட அரசுக்குத் தெரியவில்லையே என மக்கள் வேதனை

 

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு… மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தது கூட அரசுக்குத் தெரியவில்லையே என மக்கள் வேதனை

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு… மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தது கூட அரசுக்குத் தெரியவில்லையே என மக்கள் வேதனை
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. முதல்நாளான இன்று புதுக்கோட்டையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கல் வீசி கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் பெயரளவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 1000ம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பாதிப்பு என்று மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைகழிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சமூக பரவல் நிலையை அடைந்து பல நாட்கள் ஆகிறது, அரசு உண்மையை மறைக்கிறது என்று மருத்துவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 5ம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கியுள்ளது. ஒரு சில கட்டுப்பாடுகள் தவிர்த்து மற்ற அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளது. அரசு பஸ் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் மத்தியில் பீதி உள்ளது. இதனால் அரசு பஸ்களில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு… மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தது கூட அரசுக்குத் தெரியவில்லையே என மக்கள் வேதனைபுதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று காலை புறப்பட்டது. பழைய பஸ் நிலையம் அருகே வந்தபோது பஸ்ஸில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. முன்பக்க கண்ணாடி நொருங்கி விழுந்தது. இதனால், ஓட்டுநர், பயணிகள், சாலையில் செல்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர். யார் கல் வீசி தாக்கியது என்று தேடியபோது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கல் வீசியது தெரிந்தது. இத்தனை நாட்கள் சாலையில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த பெண் திடீரென்று சாலையில் பஸ், அதிவேக வாகனங்கள் இயக்கத்தால் அதிர்ச்சியடைந்து கல் வீசி தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு… மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்தது கூட அரசுக்குத் தெரியவில்லையே என மக்கள் வேதனைமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட பொது இடங்களில் நடமாடுவது தவறு என்று தெரிகிறது. ஆனால், இது அரசுக்குத் தெரியவில்லையே என்று பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.