Home மாவட்டங்கள் ஈரோடு அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

கோவையில் இருந்து நேற்று மாலை சேலத்திற்கு 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப்பேருந்து ஒன்று சென்றது. பெருந்துறை அடுத்த திருவாச்சி கூரபாளையம் பிரிவு அருகே சென்றபோது, பேருந்தை முந்திச்சென்ற லாரி ஒன்று, திடீரென இடதுபுறம் திரும்பியது. இதனால் அரசுப்பேருந்து லாரி மீது மோதி சாலையின் நடுவேயிருந்த தடுப்புச்சுவர் மீது சாய்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 13 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பல்வேறு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட எஸ்.பி தங்கதுரை ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களு உரிய சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர்!

புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு...

சசிகலா என்ன சிங்கம்,புலி,கரடியா? அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய பாஜக மூத்த தலைவர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“போராடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படலாம்” : கல்லூரி முதல்வர் எச்சரிக்கை!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவ கல்லூரிகளை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் 47...

கோயம்பேட்டில் குவிந்த மக்கள் : போதிய பேருந்து வசதி இல்லாததால் நள்ளிரவில் போராட்டம்!

தொடர் விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் நேற்று இரவு மக்கள் கூட்டம் அலைமோதியது பரபரப்பு ஏற்பட்டது. வார இறுதி விடுமுறை...
Do NOT follow this link or you will be banned from the site!