• April
    04
    Saturday

Main Area

Main



மழையிலிருந்து மக்களைக் காக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் : மு.க ஸ்டாலின்

mk stalin
mk stalin

பருவ மழை தொடங்கியதன் முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிற்காமல் மழை பெய்கிறது. இதனால், சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்துள்ளது.

rain

அடுத்த சில நாட்களுக்கு மழை கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே, பெய்த மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதில், மீண்டும் கனமழை பெய்தால் மக்களின் நிலை மோசமாகிவிடும். இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், "தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. தண்ணீர் தேக்கம் காரணமாகக் கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக் கூடும்.வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும். உடனடி நிவாரணப் பணிகளையும் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.