• December
    15
    Sunday

Main Area

Main



கோபுர தரிசனத்தை ஏன் கோடி புண்ணியம் என்கிறார்கள்?

கோபுர தரிசனம்
கோபுர தரிசனம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஏன் கோபுர தரிசனத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் தெரியுமா? நமது ஆகம விதிப்படி கோயில்களை நிர்மாணித்து முறையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகள் அனைத்தும் முறையாக நடந்துக் கொண்டிருக்கும் ஆலயங்களில் இருக்கும் கோபுரங்களின் உச்சியில் கலசங்கள் இருக்கும்.

கலசம்

இந்த கலசங்கள் வெறுமனே சும்மா அழகுக்காக மட்டும் வைக்கப்பட்டதில்லை. இந்த கலசங்களின் உச்சியில், கூரிய முனை வழியாக வானத்தில் இருக்கும் உயிர் சக்தியை முழுமையாக அவற்றுள் கிரகித்துக் கொண்டு வெளியிடுகிறது. அந்த உயிர் சக்தியை நாம் தரிசித்துப் பெறுவதால் நமக்கு புத்துணர்ச்சி, மனதில் தூய்மையும், நோய் எதிர்ப்பு சக்திகளும் கிடைக்கிறது. இந்த காரணங்களினால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். 

கலசம்


கோபுரத்தின் உச்சியில் இருப்பதைப் போலவே ஒவ்வொரு கர்ப்பகிரக கோபுரத்தின் மேலும் கலசங்கள் இருக்கும். இந்த கலசங்களும் அதே போல் உயிர் சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள கர்ப்பகிரகத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பீடத்திற்கு அனுப்பி கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆலயத்திலும், கர்ப்பக்கிரத்தின் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் அபிஷேக நீர் செல்வதற்காக துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும் அபிஷேக நீரிலும் உயிர் சக்தி கலந்து வெளிப்படுகிறது.

கலசம்

அதனால் தான் அபிஷேக நீர் வெளிப்படும் இடத்தில் கோயிலை வலம் வரும் போது நாம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நொடிகளில் நம் மீதும் உயிர் சக்தி பரவுகிறது. இது ஆன்மிக ரீதியிலான விளக்கம் மட்டுமல்ல. விஞ்ஞான ரீதியாகவும் இதை நிரூபித்திருக்கிறார்கள். அப்படித் தொடர்ந்து சக்திகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால் தான் ஆலயங்களில் சிலைகளின் குறுக்கே செல்லக் கூடாது என்று சொல்லி வைத்தார்கள். சுவாமி சிலைகளின் குறுக்கே செல்லாமல் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும்.

2018 TopTamilNews. All rights reserved.