சொந்த மாவட்டத்திற்கு ஆட்சியரான கோபால சுந்தர ராஜ் ஐ.ஏ.எஸ்!

 

சொந்த மாவட்டத்திற்கு ஆட்சியரான கோபால சுந்தர ராஜ் ஐ.ஏ.எஸ்!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக, கீழக்கரையை சேர்ந்த கோபால சுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண் இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநராக இருந்த கோபால சுந்தர ராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்து, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாவிலாதோப்பு கிராமத்தை பூர்விகமாக கொண்ட கோபால சுந்தர ராஜ் ஐ.ஏ.எஸ்., விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். விவசாயம் நலிவடைந்ததால் இவரது குடும்பத்தினர் நிலங்களை விற்று விட்டு, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே கடம்பா நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினர்.

சொந்த மாவட்டத்திற்கு ஆட்சியரான கோபால சுந்தர ராஜ் ஐ.ஏ.எஸ்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாவிலாதோப்பு பள்ளியில் தொடக்க கல்வியும், ராமநாதபுரம் செய்யதம்மாள் பள்ளியில் மேல்நிலை கல்வியும் படித்தார். தொடர்ந்து, கோவை வேளாண் கல்லூரியில் பி.எஸ்சி-யும், டெல்லி பல்கலை.யில் எம்.எஸ்சி பட்டமும் பெற்றுள்ள இவர், தந்தை மறைவுக்கு பின், மாமனார் ஓய்வுபெற்ற ஆசிரியர் மாரியப்பன் உதவியுடன் படித்து வந்தார்.

தனது 3-வது முயற்சியில் ஐஏஎஸ் ஆக தேர்வு பெற்ற கோபால சுந்தர ராஜ், தேசிய அளவில் 5-வது இடத்தை பிடித்து அசத்தினார். தொடர்ந்து குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்து வந்த கோபால சுந்தரராஜ், தனது சொந்த மாவட்டத்திலேயே ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளது, மாவட்ட மக்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.