“பொருட்களை உடைத்து .பெண்களை இடித்து…”குடிபோதையில் போலீசின் அராஜகம் -கறிக்கடைக்காரர் கண்ணீர்..

 

“பொருட்களை உடைத்து .பெண்களை இடித்து…”குடிபோதையில் போலீசின் அராஜகம் -கறிக்கடைக்காரர் கண்ணீர்..

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தின் மவானா நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் போலீஸ் படை புகுந்து வீட்டிற்குள்ளிருந்த பொருட்களை கொள்ளையடித்ததாக அந்த குடும்பத்தினர் போலீசிடமே புகாரளித்துள்ளனர்.

“பொருட்களை உடைத்து .பெண்களை இடித்து…”குடிபோதையில் போலீசின் அராஜகம் -கறிக்கடைக்காரர் கண்ணீர்..ஜூலை 4ம் தேதி சனிக்கிழமை இரவு மாவானாவின் ராஜோ வாலா பாக் பகுதியில் போலிசார் சட்டவிரோதமாக விலங்குகளை கொன்றதாக கூறி அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர் .அப்போது உமர் என்பவரின் வீட்டிற்குள் சீருடையில் நுழைந்த போலீசார் உமரை கேட்டு வீட்டிலுள்ளவர்களை கொடுமை படுத்தியுள்ளனர் .

“பொருட்களை உடைத்து .பெண்களை இடித்து…”குடிபோதையில் போலீசின் அராஜகம் -கறிக்கடைக்காரர் கண்ணீர்..மேலும் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டிலுள்ளோர் உமர் கட்டாலிக்கு போயிருக்கிறார் என்று கூறியதை நம்பாமல் வீட்லுள்ள பொருட்களை உடைத்ததாகவும் ,வீட்டிலுள்ள பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும் ,மேலும் அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததால் பொருட்களை உடைக்கும்போது நடனமாடியதாகவும் வீட்டிலிருந்த ஒரு பெரியவர் கூறினார் .

“பொருட்களை உடைத்து .பெண்களை இடித்து…”குடிபோதையில் போலீசின் அராஜகம் -கறிக்கடைக்காரர் கண்ணீர்..ஆனால் போலீஸ் தரப்பில் இதை மறுத்து ,அந்த பகுதி மக்களுக்கு விலங்குகளின் இறைச்சியினை விற்பதற்கு மட்டும்தான் அனுமதியளித்துள்ளார்கள் ,விலங்குகளை கொல்ல அனுமதியில்லை ,ஆனால் அவர்கள் விலங்குகளை கொன்றதாக எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் அந்த பகுதியில் சோதனை நடத்தினோம் .அப்போது உமர் என்பவர் மீது வந்த புகாரின் பேரில் அவரை தேடி அவருக்கு வீட்டுக்கு சென்று கேட்டுவிட்டு வந்து விட்டோம் என்றனர் .இந்த சம்பவம் பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் .