திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள கீழையூர் மூன்று சாலை சந்திப்பில் உள்ள பெரியார் சிலை கடந்த ஜூலை 16ம் தேதி அவமரியாதை செய்யப்பட்டது. நள்ளிரவில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதால் தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
இந்த சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மணி (45) கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த இரவில் அந்த பகுதி செல்போன் டவரில் பதிவான எண்களை ஆய்வு செய்தபோது மணி அங்கு வந்து சென்றிருப்பது தெரிந்தது. விசாரணையில் பெரியார் சிலை அவமரியாதை செய்ததை மணி ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்ட மணி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திருக்கோவிலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணி, கடலூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார்.