பிப்.24ம் தேதியோடு கூகுள் சேவை நிறுத்தம்… எப்படி டேட்டாவை சேமிப்பதுனு தெரிஞ்சிகோங்க!

பிப்.24ம் தேதியோடு கூகுள் சேவை நிறுத்தம்… எப்படி டேட்டாவை சேமிப்பதுனு தெரிஞ்சிகோங்க!

கூகுள் நிறுவனம் மியூஸிக், வீடியோ, மேப் என பலதரப்பட்ட சேவைகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் மியூஸிக் சேவைக்கு கூகுள் பிளே மியூஸிக் (Google Play Music) என்ற செயலியை உருவாக்கியிருந்தது. இதன் மூலம் பலரும் ஆப்லைனில் தங்களுடைய மெமரியில் இருக்கும் பாடல்களைக் கேட்டுவந்தனர். அதுனுடன் சேர்த்து ஆன்லைன் மூலம் பாடல்களைக் கேட்கும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டிருந்தது.

பிப்.24ம் தேதியோடு கூகுள் சேவை நிறுத்தம்… எப்படி டேட்டாவை சேமிப்பதுனு தெரிஞ்சிகோங்க!

ஆரம்பத்தில் இச்செயலிக்கு வரவேற்பு இருந்தபோதும் அமேசான், சாவ்ன், ஸ்பாட்டிபை என பல்வேறு மியூஸிக் சேவை செயலிகள் சந்தையில் களமிறங்கின. கூகுள் பிளே மியூஸிக்கை விட மிகவும் எளிய முறையில் இருந்ததால் அனைவரும் அந்தச் செயலிகளுக்குத் தாவினர். இச்சூழலில் கூகுளின் வீடியோ சேவை வழங்கும் யூடியூப்பைக் கொண்டு யூடியூப் மியூஸிக் என்ற புதிய செயலியை உருவாக்கியது.

பிப்.24ம் தேதியோடு கூகுள் சேவை நிறுத்தம்… எப்படி டேட்டாவை சேமிப்பதுனு தெரிஞ்சிகோங்க!

மிகவும் அரிதான பாடல்களின் வீடியோக்கள் கூட யூடியூப்பில் கிடைக்கும். அதேபோல யூடியூப் மியூஸிக் செயலியிலும் அதே வசதியை வாடிக்கையாளருக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. மக்களின் கவனத்தை இச்செயலியின் பக்கம் திசைதிருப்ப கூகுல் பிளே மியூஸிக்குக்கு மூடுவிழா நடத்தி, அவர்களை அப்படியே யூடியூப் மியூஸிக் செயலிக்கு வரவழைப்பதே கூகுளின் திட்டமாக இருக்கிறது.

பிப்.24ம் தேதியோடு கூகுள் சேவை நிறுத்தம்… எப்படி டேட்டாவை சேமிப்பதுனு தெரிஞ்சிகோங்க!

அந்த வகையில் பிளே மியூஸிக்குக்கு வரும் பிப்.24ஆம் தேதியோடு நிரந்தர மூடுவிழா நடத்தப் போகிறது. அதன்படி, அன்றிலிருந்து அனைத்து டேட்டாக்களையும் அழிக்கிறது. ஒருமுறை அந்த டேட்டாக்கள் அழிக்கப்பட்டுவிட்டால் அதன் பிறகு அவற்றைத் திரும்பப் பெற முடியாது. இதற்காக ஒரு மாற்றையும் கூகுள் வழங்கியிருக்கிறது. 24ஆம் தேதிக்கு முன் அனைத்து டேட்டாக்களையும் யூடியூப் மியூஸிக் செயலிக்கு மாற்றும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

பிப்.24ம் தேதியோடு கூகுள் சேவை நிறுத்தம்… எப்படி டேட்டாவை சேமிப்பதுனு தெரிஞ்சிகோங்க!

எப்படி கூகுள் பிளே மியூஸிக் பாடல்களை யூடியூப் மியூஸிக் செயலிக்கு மாற்றுவது?

1.முதலில் உங்களின் ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் ஐஓஎஸ்ஸில் யூடியூப் செயலியைப் பதிவிறக்க வேண்டும்.

2.அச்செயலியின் டாப் ஸ்கிரினில் இருக்கும் டிரான்ஸ்பர் பட்டனை அழுத்த வேண்டும். இதற்குப் பிறகு உங்களின் அனைத்து டேட்டாக்களும் யூடியூப்புக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடும்.

பிப்.24ம் தேதியோடு கூகுள் சேவை நிறுத்தம்… எப்படி டேட்டாவை சேமிப்பதுனு தெரிஞ்சிகோங்க!

3.இது டிரான்ஸ்பர் ஆவதற்கு சில மணி நேரங்கள் பிடிக்கும். இறுதியில் டிரான்ஸ்பர்ட் என்ற நோட்டிபிகேஷன் வந்தவுடன் நீங்கள் யூடியூப் மியூஸிக்கில் அனைத்து டேட்டாக்களையும் பார்த்து பாடல் கேட்டு மகிழலாம்.