darbar
  • January
    17
    Friday

Main Area

Main



கூகுளில் அதிகம் தேடப்பட்ட அபிநந்தன்...யாரால் தெரியுமா?

அபிநந்தன்
அபிநந்தன்

இந்தியா வீரர்களைப் போற்றும் நாடு, வீரத்தை போற்றும்  நாடு.  வாய்ப்பு கிடைத்தால் தங்கள் வீரத்தை வெளிப்படுத்த அநேக வீரர்கள் எல்லைகளில் உள்ளனர். அவர்களில் ஒருவர் அபிநந்தன். புல்வாமா தாக்குதலை அடுத்து நடந்த எதிர்தாக்குதலில், இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தது. இந்திய விமானி ஒருவர் பிடிப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு நிமிடம் உருக்குலைந்து போனது. 

ttn

எதிரியின் கோட்டையிலிருந்து,  தேநீர் அருந்தியபடி பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் கேள்விக்குப் பதிலளித்த அந்த வீரன், தனது அடையாளம், விமானத்தின் வகையைக் கேட்டபோது அதை சொல்ல மறுத்து மனதைரியத்தோடு  நின்றது மெய் சிலிர்க்க வைத்தது. அதே சமயம் பாகிஸ்தானுக்கு எதிராக ஓட்டு மொத்த உலகநாடுகளும் குரல் கொடுக்க, போர் வேண்டாம் அமைதியே போதும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவரை விடுவித்தார்.

ttn

இந்நிலையில்   பாகிஸ்தானில் கூகுள் தேடுதளத்தில் அபிநந்தன் அதிகம் தேடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அபிநந்தன் குறித்த தகவலை பாகிஸ்தானியர்கள் லட்சக்கணக்கான பேர் கூகுளில் தேடியுள்ளதாகவும், அதேபோல் நடிகை சாரா அலிகானை குறித்தும் அவர்கள் தேடியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

2018 TopTamilNews. All rights reserved.