”போட்டோஸ் செயலியில் சில ஃபில்டர்களுக்கு கட்டணம் விதிக்க கூகுள் திட்டம்” ?

”போட்டோஸ் செயலியில் சில ஃபில்டர்களுக்கு கட்டணம் விதிக்க கூகுள் திட்டம்” ?

ஆண்டிராய்ட் போன்களில் போட்டோ பேக்அப் செயலியாக உள்ள கூகுள் போட்டோஸ் இதுநாள் வரை இலவசமாக கிடைத்து வருகிறது. இந்நிலையில் இதில் சில எடிட்டிங் வசதிகளை பெறுவதற்கு கட்டணம் விதிக்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

”போட்டோஸ் செயலியில் சில ஃபில்டர்களுக்கு கட்டணம் விதிக்க கூகுள் திட்டம்” ?

அதாவது, கூகுள் போட்டோஸ் செயிலியில் அனைத்து ஆப்ஷன்களையும் இலவசமாக பெற முடியாத நிலையை ஏற்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் குறிப்பிட்ட சில எடிட்டிங் ஃபில்டர்களை பயன்படுத்துவதற்கு கூகுள் ஒன் சப்ஸ்கிரிப்ஷனை செலுத்துமாறு அந்நிறுவனம் வலியுறுத்தும் என கூறப்படுகிறது.

”போட்டோஸ் செயலியில் சில ஃபில்டர்களுக்கு கட்டணம் விதிக்க கூகுள் திட்டம்” ?

பிரிட்டனில் கூகுள் போட்டோஸ் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர் டிவிட்டரில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதில், கலர் பாப் அப் பில்டரை பயன்படுத்த கூகுள் போட்டோஸ் செயலி தன்னிடம் கூகுள் ஒன் சந்தா செலுத்த கேட்பதாக கூறியிருந்தார். இதன் மூலம் இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து கருத்து கூறிய கூகுள் நிறுவனம், கலர் பாப் பில்டருக்கு கட்டணம் விதிக்கப்படவில்லை என்றும் ஆனால் கூகுள் ஒன் சந்தா செலுத்தியவர்களுக்கு கூடுதல் சிறப்புடன் கூடிய செயலி பயன்படுத்த கிடைக்கும் என்று விளக்கமளித்தது. அதன் மூலம் கட்டணம் விதிப்பவர்களுக்கு கூடுதல் சிறப்பு வசதியை போட்டோஸ் செயலியில் கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

”போட்டோஸ் செயலியில் சில ஃபில்டர்களுக்கு கட்டணம் விதிக்க கூகுள் திட்டம்” ?

இந்நிலையில் தனித்தனியாக இலவச மற்றும் பெய்ட் ஆப்ஸ் என வெவ்வேறு செயலிகளாக கூகுள் போட்டோஸ் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது தற்போது நடைமுறையில் உள்ள அதே இலவச செயலியில் குறிப்பிட்ட பில்டர்களை பயன்படுத்த மட்டும் கூகுள் தனியாக கட்டணம் கேட்குமா என்பது தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக கூகுள் நிறுவனமே அறிவிக்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-எஸ். முத்துக்குமார்