”குட்டீஸ்களுக்கான 3 செயலிகள் – பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்”

 

”குட்டீஸ்களுக்கான 3 செயலிகள் – பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்”

குழந்தைகளுக்கான 3 செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கி உள்ளது.

மால்வேர் எனப்படும் தகவல் திருடும் செயலிகளை கண்டறிந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி வரும் கூகுள் நிறுவனம், தனது பாலிசிகளுக்கு மாறாய் நடக்கும் எந்த செயலியையும் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க தயங்குவதில்லை. இந்த வரிசையில் சமீபத்தில் இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலியான பேடிஎம் மை கூட பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது. இந்நிலையில் குழந்தைகளை இலக்காக கொண்டு செயல்படும் 3 செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கி உள்ளது.

”குட்டீஸ்களுக்கான 3 செயலிகள் – பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்”

பிரின்சஸ் சலூன், நம்பர் கலரிங் மற்றும் கேட்ஸ் அண்ட் காஸ்பிளே ஆகிய மூன்று செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று செயலிகளும் மொத்தமாக 2 கோடிக்கும் அதிகமான டவுன்லோடு செய்யப்பட்டுள்ள விபரமும் தெரியவந்துள்ளது. இதனிடையே இந்த 3 செயலிகள் நீக்கப்பட்டதற்கான காரணமும் தெரியவந்துள்ளது.

”குட்டீஸ்களுக்கான 3 செயலிகள் – பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்”

சர்வதேச டிஜிட்டல் தணிக்கை கவுன்சில் என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், கூகுள் வகுத்துள்ள டேட்டா பாலிசிகளுக்கு மாறாக, குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர்களின் ஆண்டிராய்ட் ஐடி உள்ளிட்ட பல தரவுகளை சேகரித்ததும் அதன் மூலம் தரவுகள் கசிவதற்கு உள்ள வாய்ப்புகளையும் அந்த கவுன்சில் கண்டறிந்துள்ளது. இந்த தகவலை அடுத்து குழந்தைகளுக்கான அந்த 3 செயலிகளையும் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளதாக தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்