kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


Google play, phonePe, paytm யூசர்ஸ் உஷார்!!

Google play, phonePe, paytm
Google play, phonePe, paytm
Loading...

Google Pay, PhonePe, Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தி UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களா நீங்கள்? நிச்சயம் பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகளை எந்தவித இழப்பும் இன்றி செய்யுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். 

tez,phonepe

ஒரு சில வருடங்களுக்கு முன் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிகளுக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து முடித்து விட்டு வர வேண்டும். ஆனால் தற்போது ஸ்மார்ட் போன்களில் உள்ள தொழில்நுட்ப உதவியால் எளிதில் பண பரிவர்த்தனை செய்ய முடிகிறது. இதனை செய்ய ஒரு சில நிமிடங்களே எடுப்பதால் பலரும் இதனை பயன்படுத்த துவங்கி வருகின்றனர். மேலும் அனுப்பிய அடுத்த நொடியே மறுமுனையில் இருப்பவருக்கு சென்றுவிடுவதால் அனைவராலும் விரும்பப்பட்டும் வருகிறது. 

வங்கிகளும் தங்களது பெயரில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் செயலிகளை உருவாக்கி பயனார்களின் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது.

இன்று தொழில்நுட்ப சாதனங்கள் குறித்து அறிந்தவர்கள் இவற்றை எளிதில் பயன்படுத்தி பயன்பெற முடிகிறது ஆனால் பயன்படுத்த தெரியாதவர்கள் புதிதாக உள்ளே வருகையில் ஒரு சில பாதுகாப்பு விஷயங்களை மேற்கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இணையதள திருட்டுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. வங்கிகளும் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறது. 

இந்நிலையில் அண்மையில் ஐசிஐசிஐ வங்கி தனது UPI பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கிறது. 

bhim

அதில் வங்கி அல்லாத சில தனியார் நிறுவனங்கள் செயலிகளான Google Pay, PhonePe, Paytm  போன்ற செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கும்படி குறிப்பிட்டிருந்தது. அவற்றில் சிலவற்றை தற்போது காண்போம்.

1. வங்கிகளில் இருந்து பேசுகிறோம் என உங்களுக்கு கால் வந்தால் சுதரித்துக்கொள்ளுங்கள். டெபிட் கார்டு அல்லது வங்கி விவரங்களைக் கேட்டால் நேரில் வந்து கொடுப்பதாக கூறிவிடுங்கள். இது போன்ற அழைப்புகளை வங்கிகள் செய்வதில்லை.

2. புதிதாக UPI பரிவர்த்தனை சேவையைப் பயன்படுத்தும் பயனர்களை இதுபோன்ற திருடர்கள் குறிவைக்கின்றனர். ஆதலால், குறைந்தபட்ச பாதுகாப்பு வசதியை விவரம் தெரிந்தவர்களையோ அல்லது வங்கியையோ அணுகி கற்றுக்கொள்ளுங்கள்.

3. உங்கள் UPI கணக்கில் கடவுச்சொல்லை பதிவிடும்போது மற்றவர்களுக்கு தெரியாதவாறு வைத்துக்கொள்ளுங்கள். மேலும், இதனை யாரிடமும் வெளியிட வேண்டாம். இதுகுறித்த உதவிக்கு வங்கியை அணுகவும்.

4. குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு வரும் எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம். உடனடியா அந்த குறுஞ்செய்தியில் அழித்து விடுங்கள்.

5. UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் போது, குறுஞ்செய்தி மூலம் நீங்கள் செய்வதை தவிர வேறு ஏதாவது பரிசோதனைக்கான கோரிக்கை வந்தால் உடனடியாக வங்கியிடம் புகார் அளித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

6. அதேபோல் ஓடிபி கூறுங்கள் என அழைப்புகள் ஏதும் வந்தால் அதுகுறித்து வங்கி மேலாளர் இடம் புகார் அளிப்பது அவசியம்.

மேற்கண்ட செய்திகளை பயனாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி அனுப்பியிருந்தது. இது ஐசிஐசிஐ வங்கி பயனாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்துவித அங்கே பயனர்களுக்கும் பொருந்தும். ஆதலால் இணையதள பண பரிவர்த்தனையை ஒன்றுக்கு இருமுறை பாதுகாப்பை உறுதி செய்த பிறகு தொடருங்கள்.

2018 TopTamilNews. All rights reserved.