கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களின் தரவுகளை திருடும் 17 ட்ரோஜன் ஆப்கள்

 

கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களின் தரவுகளை திருடும் 17 ட்ரோஜன் ஆப்கள்

கலிபோர்னியா: கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களின் தரவுகளை திருடும் 17 ட்ரோஜன் ஆப்கள் இருப்பதாக அவாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகிள் பிளே ஸ்டோரில் ட்ரோஜன் வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக மறைக்கப்பட்ட விளம்பரங்களை கொண்ட 17 ஆப்கள் இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனமான அவாஸ்ட் கூறியுள்ளது. இத்தகைய ஆப்கள் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பயனர்களை குறிவைத்தே செயல்படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இவை கேம் ஆப்களாகவே உள்ளன. இந்த ஆப்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்பிருப்பதாக அவாஸ்ட் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களின் தரவுகளை திருடும் 17 ட்ரோஜன் ஆப்கள்

பாதிக்கப்பட்ட சாதனங்களில் இருந்து தங்கள் ஐகான்களை மறைக்கக் கூடிய திறனை இந்த ட்ரோஜன் ஆப்கள் பெற்றுள்ளன. மேலும் இந்த சாதனங்களில் பயனர்களால் நிறுத்த முடியாத விளம்பரங்கள் அதிகளவில் காண்பிக்கப்படும். முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 47 ட்ரோஜன் ஆப்களையே அவாஸ்ட் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் இதில் 30 ஆப்களை கூகுள் நிறுவனம் நீக்கி விட்டது. இன்னும் 7 ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கப்படாமல் மீதமுள்ளது.