பிளே ஸ்டோரில் உள்ள செயலி, கேம்ஸ்களை பகிரும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த கூகுள் திட்டம்!

பிளே ஸ்டோரில் உள்ள செயலி, கேம்ஸ்களை பகிரும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த கூகுள் திட்டம்!

செயலிகளையும், கேம்ஸ்களையும் ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு பகிர உதவும் வசதியை பிளே ஸ்டோரில் ஏற்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வசதிக்காக ஷேர்இட் போன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இந்த வசதி விரைவில் பிளே ஸ்டோரில் வர உள்ளது. இதன் மூலம், மற்ற செயலி துணையின்றி, பிளே ஸ்டோரில் கிடைக்கும் இலவச செயலிகள் மற்றும் கேம்ஸ்களை, அருகில் உள்ள மற்ற போன்களுக்கு ஷேர் செய்யலாம் என தெரிகிறது. மேலும் நாம் பயன்படுத்தும் செயலி மற்றும் கேம்ஸ்களையும் அருகில் உள்ள போன்களுக்கு பகிரலாம் என்றும் இந்த வசதி, புளூடுத், வைபை டைரக்ட் ஆகியவற்றை பயன்படுத்தி இயங்கும் என கூறப்படுகிறது.

பிளே ஸ்டோரில் உள்ள செயலி, கேம்ஸ்களை பகிரும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த கூகுள் திட்டம்!

இதற்காக ”மை ஆப்ஸ் அண்ட் கேம்ஸ்” பிரிவை ”மேனேஜ் ஆப்ஸ் அண்ட் டிவைஸ்” என மாற்றி அமைக்கவும் கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.