புதிய லோகோ, மேப்ஸ் வியூ, எளிதான யு.ஐ – முழுமையான மறுவடிவமைப்பு பெறும் ‘கூகுள் ஃபோட்டோஸ்’

 

புதிய லோகோ, மேப்ஸ் வியூ, எளிதான யு.ஐ – முழுமையான மறுவடிவமைப்பு பெறும் ‘கூகுள் ஃபோட்டோஸ்’

கலிபோர்னியா: கூகுள் ஃபோட்டோஸ் ஆப் முழுமையான மறுவடிவமைப்பு பெற அப்டேட் செய்யப்பட உள்ளது.

கூகுள் ஃபோட்டோஸ் ஆப் முழுமையான மறுவடிவமைப்பு பெற அப்டேட் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த அப்டேட்டில் புதிய லோகோ, மேப்ஸ் வியூ, எளிதான யூசர் இன்டர்பேஸ் போன்ற மாற்றங்கள் இடம்பெற உள்ளன. அடுத்த வாரம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் சாதனங்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. போட்டோஸ், சர்ச், லைப்ரரி போன்ற ஆப்ஷன்கள் மட்டுமே புதிய கூகுள் போட்டோஸ் ஆப்-இன் முகப்பு பக்கத்தில் இடம்பெறும்.

புதிய லோகோ, மேப்ஸ் வியூ, எளிதான யு.ஐ – முழுமையான மறுவடிவமைப்பு பெறும் ‘கூகுள் ஃபோட்டோஸ்’

கூகுள் போட்டோஸ் லோகோவான ஸ்பின் வீல் தற்போது இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டு இன்னும் எளிதான வடிவமைப்பு கொண்ட லோகோவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உடனே இந்த அப்டேட் வேண்டும் என்பவர்கள் கூகுள் போட்டோஸ் ஆப்-இன் ஏ.பி.கே மிரர் கோப்பை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.