யூடியூப் உள்ளிட்ட கூகுள் சேவைகளின் செயல்பாடுகள் சீரானது

 

யூடியூப் உள்ளிட்ட கூகுள் சேவைகளின் செயல்பாடுகள் சீரானது

ஜிமெயில், யூ டியூப், கூகுள் டாக்ஸ், கூகுள் மேப், பிளேஸ்டோர் உள்ளிட்ட செயலிகளின் இயக்கம் கடந்த ஒரு மணி நேரமாக முடங்கியதால் பயனர்கள் அவதியாகியுள்ளாகினர். ஜி.மெயில் மற்றும் யூ டியூப் செயலிகளை நம்பி கோடிக்கணக்கானோர் உள்ளதால் அவர்கள் தவிப்புக்கு உள்ளாகினர். சர்வர் கோளாறு காரணமாக முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கோளாறினை சரி செய்யும் பணி தீவிரமாக இருக்கிறது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

யூடியூப் உள்ளிட்ட கூகுள் சேவைகளின் செயல்பாடுகள் சீரானது

அதன்படி கடந்த சிறிது நேரமாக முடங்கியிருந்த கூகுள் செயலிகள் படிப்படியாக மீளத் தொடங்கின. சர்வர் கோளாறு காரணமாக முடங்கிய யூடியூப் வலைதளத்தின் செயல்பாடு சீரானது. தற்போது யூடியூப் உள்ளிட்ட செயலிகள் செயல்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கூகுளின் சேவைகள் முடங்கியது குறிப்பிடதக்கது.