’டிக்டாக் நிறுவனத்தோடு கூகுள்-க்கு இருக்கும் தொடர்பு ஒன்றே ஒன்றுதான்’ சுந்தர் பிச்சை

’டிக்டாக் நிறுவனத்தோடு கூகுள்-க்கு இருக்கும் தொடர்பு ஒன்றே ஒன்றுதான்’ சுந்தர் பிச்சை

டிக்டாக் மிகக்குறைந்த காலத்தில் கோடிக்கணக்கான மக்களால் டவுண்லோடு செய்யப்பட்ட ஆப்.

தனக்குப் பிடித்த நடிகர்களின் பாடலை, டான்ஸை சோஷியல் மீடியால் ஷேர் செய்துகொண்டிருந்த ரசிகர்கள், தாங்களே பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி வீடியோ வெளியிடும் வாய்ப்பை அளித்தது டிக்டாக்.

இந்தியாவுக்கு சீனாவுடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக எழுந்த பிரச்னையில் டிக்டாக் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சீன நிறுவன ஆப்களை தடை செய்தது இந்தியா.

’டிக்டாக் நிறுவனத்தோடு கூகுள்-க்கு இருக்கும் தொடர்பு ஒன்றே ஒன்றுதான்’ சுந்தர் பிச்சை

அமெரிக்காவிலும் டிக்டாக் ஆப்க்கு தடை விதிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க ரகசியங்களை சீன நிறுவனத்திற்கு அளிப்பதாகக் குற்றச்சாட்டை அது முன் வைத்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ரஷ்யா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் குற்றசாட்டுகளைக் கடுமையாக மறுக்கிறது டிக்டாக் நிறுவனம். எந்த நிறுவனத்திடமும் பயன்பாட்டாளர்களின் விவரங்களை அளிக்கவில்லை. மற்ற ஆப்களை விடவும் பாதுகாப்பில் மிகுந்த கவனமாக இருக்கிறோம் என்று டிக்டாக் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

’டிக்டாக் நிறுவனத்தோடு கூகுள்-க்கு இருக்கும் தொடர்பு ஒன்றே ஒன்றுதான்’ சுந்தர் பிச்சை

தற்போது டிக்டாக் நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கப்போகிறது எனும் செய்தி சில நாட்களாகப் பரவி வருகிறது. இது குறித்து, கூகுளின் சிஇஓவும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை தெளிவான பதில் அளித்து குழப்பங்களைத் தீர்த்து வைத்திருக்கிறார்.

சுந்தர் பிச்சை, “டிக்டாக்குக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் உள்ள ஒரே தொடர்பு கூகுளின் கிளவுட் சேவைகளுக்கு உரிய தொகையை அளிப்பது மட்டுமே. மேலும், டிக்டாக் நிறுவனத்தை வாங்கும் எண்ணம் ஏதும் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.