மத்திய அரசின் விதிகளை பின்பற்ற தயார்- அடிபணிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், கூகுள்!

மத்திய அரசின் விதிகளை பின்பற்ற தயார்- அடிபணிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், கூகுள்!

மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்ற பேஸ்புக், கூகுள்,வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் விதிகளை பின்பற்ற தயார்- அடிபணிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், கூகுள்!

பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டரில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் பதிவிடலாம் என இருந்தது. ஆனால் மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வகுத்தது. அதன்படி, சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் பதிவோ அல்லது போட்டோவோ சர்ச்சைக்குரியதாக இல்லாவிட்டாலும், மத்திய அரசுக்கு அது சர்ச்சையானதாக தெரிந்தால் அந்த ட்வீட்டோ அல்லது அந்த ட்வீட் போட்ட உங்களின் ஐடியோ முடக்கப்படும். வெளிப்படையாக சொல்லப்போனால் இனி சமூக வலைதளங்களின் ஆணிவேர் மத்திய அரசின் கையில் இருக்கும், இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25-ஆம் தேதிக்குள் சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் விதிகளை பின்பற்ற தயார்- அடிபணிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், கூகுள்!

இந்நிலையில் மத்திய அரசின் இந்த புதிய விதிகளுக்கு கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப், லிங்க்டு இன், ஷேர் ஷட், கூ, ஆகிய நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. புதிய விதிகளின் படி இந்தியாவில் நியமிக்கப்படும் அதிகாரிகளின் பெயரையும் இந்த நிறுவனங்கள் பகிர்ந்துள்ளன. ஆனால், ட்விட்டர் நிறுவனம் புதிய விதிகளை பின்பற்றுவது தொடர்பாக எந்த விவரத்தையும் அளிக்கவில்லை.