எச்-1பி விசா நிறுத்தம்: கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அதிருப்தி

 

எச்-1பி விசா நிறுத்தம்: கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அதிருப்தி

நியூயார்க்: அமெரிக்காவில் எச்-1பி விசா வழங்குவது இந்தாண்டு இறுதிவரை தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு சுந்தர் பிச்சை அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எச்-1பி உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் வேலை தொடர்பான விசாக்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவு குறித்து கூகிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஏமாற்றம் தெரிவித்துள்ளார். எச்-1பி விசாக்களை வழங்குவதை நிறுத்தி வைப்பதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவன செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், “அமெரிக்காவின் பொருளாதார வெற்றிக்கு குடியேற்றம் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது. அதனால் தான் இன்று அமெரிக்கா தொழில்நுட்பத்தில் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் கூகிள் நிறுவனம் அதிபரின் இன்றைய பிரகடனத்தால் ஏமாற்றமடைந்துள்ளது. கூகுள் நிறுவனம் தொடர்ந்து புலம்பெயர்ந்தோருடன் நின்று அனைவருக்கும் வாய்ப்பை விரிவுபடுத்துவோம்” என்று கூறியுள்ளார்.