”22வது பிறந்த நாளை கொண்டாடிய கூகுள்’வீடியோ கால் மூலமாக கொண்டாடுவதை போல டூடுல்!

 

”22வது பிறந்த நாளை கொண்டாடிய கூகுள்’வீடியோ கால் மூலமாக கொண்டாடுவதை போல டூடுல்!

கூகுள் நிறுவனம் அதன் 22வது பிறந்தநாளை இன்று ( செப் 27 ) கொண்டாடுகிறது. இதற்காக, அந்நிறுவனம் ஒரு ஸ்பெஷல் டூடுலை அதன் தேடுபொறி பக்கத்தில் வைத்துள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவில் லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகிய பிஎச்டி மாணவர்களால் உருவாக்கப்பட்ட கூகுள், ஆண்டுதோறும் செப் 27ம் தேதியை அதன் பிறந்த நாளாக கொண்டாடுகிறது. வழக்கமாக, எந்த ஒரு முக்கிய தினத்தையும் சிறப்பு டூடுல் மூலமாக கொண்டாடும் கூகுள், தனது 22வது பிறந்தநாளையும், அதே டூடுல் மூலமாக வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறது.

”22வது பிறந்த நாளை கொண்டாடிய கூகுள்’வீடியோ கால் மூலமாக கொண்டாடுவதை போல டூடுல்!

இன்றைய உலக சூழ்நிலையில் பலரும் தங்கள் பிறந்தநாளை வீட்டோடு இருந்துகொண்டு, வீடியோ கால் மூலமாகவே கொண்டாடுகின்றனர். இதனை பிரதிபலிக்கும் விதமாக கூகுள் நிறுவனமும் அதன் பிறந்தநாளை இதே பாணியில் கொண்டாடி உள்ளது. இதை வெளிப்படுத்தும் விதமாக வித்தியாசமான டூடுல் படம் ஒன்றுதேடுபொறி பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி கூகுள் என்ற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான G மட்டும் தனியாக லேப்டாப் பார்த்தபடி அமர்ந்துகொண்டு மற்ற oogle வார்த்தைகளுடன் வீடியோ கால் மூலம் உரையாடியபடி தனது பிறந்தநாளை கொண்டாடுவது போல அந்த டூடுள் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்தில் கேக் ஒன்று வெட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளதையும் காட்டுகிறது. இந்த டூடுலை சமூக வலைதளங்களில் பகிருவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த டூடுலை கிளிக் செய்தால், கூகுள் தேடுபொறியே தேடலில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

  • எஸ். முத்துக்குமார்.