ஆண்டிராய்ட் 11 அறிமுகம் – கூகுள் அறிவிப்பு எந்தெந்த பிராண்டு போன்களில் அப்டேட் கிடைக்கும்!?

ஆண்டிராய்ட் 11 அறிமுகம் – கூகுள் அறிவிப்பு எந்தெந்த பிராண்டு போன்களில் அப்டேட் கிடைக்கும்!?

புதிய ஆண்டிராய்ட் 11 இயங்குதளம் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் விரைவில் எதிர்பார்க்கலாம் என கூகுள் நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூடுதல் பிரைவசி, ஸ்கிரீன் ரெக்கார்டிங் என பலதரப்பட்ட வசதிகளை தாங்கி வந்திருக்கும் புதிய ஆர் எனப்படும் ஆண்டிராய்ட் 11 இயங்குதளத்தை ஏற்கனவே டெவலப்பர் வெளியீடாக கடந்த பிப்ரவரியில் கூகுள் அறிமுகப்படுத்தியது. பின்னர் கடந்த ஜூன் மாத த்தில் பீடா வெர்சனாக வெளியிட்ட கூகுள், தற்போது பொது மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. வழக்கம்போல தேர்ந்தெடுத்த கூகிளின் சில பிக்சல் போன்களில் இந்த ஆண்டிராய்ட் 11 அப்டேட் உடனடியாக கிடைக்கும் என தெரிகிறது.

ஆண்டிராய்ட் 11 அறிமுகம் – கூகுள் அறிவிப்பு எந்தெந்த பிராண்டு போன்களில் அப்டேட் கிடைக்கும்!?

மேலும், சியோமி, ஒன்பிளஸ், ஒப்போ, ரியல்மி ஸ்மார்ட்போன்களில் விரைவில் ஆண்டிராய்ட் 11 கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. இது தவிர வேறு சில நிறுவனங்களுடன் பேசி வருவதாக தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், விரைவில் மேலும் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் ஆண்டிராய்ட் 11 இயங்குதளத்தை பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.

ஆண்டிராய்ட் 11 அறிமுகம் – கூகுள் அறிவிப்பு எந்தெந்த பிராண்டு போன்களில் அப்டேட் கிடைக்கும்!?

சியோமியை பொறுத்தவரை எம்ஐ 10 மற்றும் எம்ஐ 10 புரோ மற்றும் போகோ எப்2 புரோ ஆகிய போன்களில் ஆண்டிராய்ட் 11 அப்டேட் வழங்கும் என தெரிகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஒப்போ நிறுவனம், பைண்ட் எக்ஸ் 2 ரக ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்டிராய்ட் 11 அப்டேட் கிடைக்கும் என தெரிகிறது. ஒன்பிளஸ்சை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 8 மற்றும் 8 புரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்டிராய்ட் 11 இயங்குதளத்ததை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஆக்சிஜன் இயங்குதளத்தின் அப்டேட் கிடைக்கும் என அறிவித்துள்ளது. அதேப்போல ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 50 புரோ ஸ்மார்ட்போன்கள் தொடக்கக்கட்டமாக ஆண்டிராய்ட் 11 அப்டேட்டை பெறும் என்றும் தொடர்ந்து மேலும் சில ஸ்மார்ட்போன்களுக்கும் அப்டேட் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆண்டிராய்ட் 11 அறிமுகம் – கூகுள் அறிவிப்பு எந்தெந்த பிராண்டு போன்களில் அப்டேட் கிடைக்கும்!?

இது ஒரு புறமிருக்க சாம்சங், நோக்கியா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் பல மாடல்களிலும் ஆண்டிராய்ட் 11 அப்டேட் ஐ விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களும், விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்.