கொரோனாவிலும் ஏற்றம் கண்ட ஐடி துறை!வேலைக்கு வருவோருக்கு காத்திருக்கு அதிர்ஷ்டம்

 

கொரோனாவிலும் ஏற்றம் கண்ட ஐடி துறை!வேலைக்கு வருவோருக்கு காத்திருக்கு அதிர்ஷ்டம்

கடந்த ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பணியமர்த்தல் அதிகமாக இருக்கும் என நாஸ்காம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் ஐடி துறை மற்றும் ஏற்றம் கண்டுள்ளது. காரணம் ஊரடங்கால் பல்வேறு நிறுவனங்களும், தொழில்களும் முடங்கியிருந்தாலும், தொழில்நுட்பத்துறையினர் மட்டும் வீட்டிலிருந்தே தங்கள் பணிகளை செய்துவந்தனர். குறிப்பாக அமெரிக்க ஐடி நிறுவனங்களே கொரோனாவால் ஸ்தம்பித்த நிலையில் இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளாது. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தினாலேயே இது சாத்தியமாகியுள்ளது.

கொரோனாவிலும் ஏற்றம் கண்ட ஐடி துறை!வேலைக்கு வருவோருக்கு காத்திருக்கு அதிர்ஷ்டம்

இந்திய தொழில்நுட்பத் துறையானது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐடி துறை கிட்டத்தட்ட 8% பங்களிப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி சேவையில் 52 சதவீதமும், மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 50 சதவீதமும் அதிகரித்துள்ளது நாஸ்காம் New World: The Future is Virtual என்ற ஆய்வை அண்மையில் நடத்தியது.

அந்த ஆய்வின் படி, நடப்பு நிதியாண்டில் தொழில்நுட்ப துறையானது 1,38,000-க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியில் அமர்த்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டை விட 32% பேர் அதிகமாக பணியமர்த்தப்படலாம். அதேபோல் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பணியமர்த்தலும் 95 % அதிகரிக்கலாம். இது கடந்த ஆண்டைவிட 67% அதிகமாகும். 2020-21 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் கணித்ததை விட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.