ஆரோக்கியமான வாழ்வுக்குக் கட்டாயம் செய்ய வேண்டிய 6 வழிகள்!

 

ஆரோக்கியமான வாழ்வுக்குக் கட்டாயம் செய்ய வேண்டிய 6 வழிகள்!

ஆரோக்கியமான வாழ்க்கை நமக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கிறது. எந்த ஒரு உடல் பாதிப்பும் இன்றி, ஆழ்ந்த தூக்கம், அன்றாட வேலையில் எந்த சிரமமும் இல்லாத மனநிலை எல்லாம் அமைந்தால் அதுதான் சொர்க்கம் என்று சொல்லலாம். அப்படியான வாழ்க்கை முறையைப் பெறுவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. தினமும் கொஞ்சம் முயற்சி செய்தால் நம்மாலும் அப்படி ஒரு ஆரோக்கியமான நல்வாழ்வை வாழ முடியும்.

ஆரோக்கியமான வாழ்வுக்குக் கட்டாயம் செய்ய வேண்டிய 6 வழிகள்!

எந்த ஒரு வேலையும் செய்யாமல் முடங்கிக் கிடந்தால் உடலும் அதற்கு பழக்கப்பட்டுவிடும். தொடர்ந்து உடலை பழக்கிக்கொண்டே இருக்கும்போதுதான் அது வளைந்துகொடுத்து வேலை செய்யும். நாற்காலி, சோஃபாவில் அமர்ந்து சாப்பிட்டவர்களுக்கு திடீரென்று ஒரு நாள் தரையில் அமர்ந்து சாப்பிடுவது என்பது முடியாத காரியமாக இருக்கும். காலை மடித்து அமரும் பக்குவத்தை உடல் இழந்துவிட்டது என்று அர்த்தம். இப்படி ஆகிவிடாமல் இருக்க உடலை இயக்கிக்கொண்டே இருக்க வேண்டும். தினமும் 30 நிமிடங்களுக்கு உடலை வளைத்து. குனிந்து பயிற்சிகள் செய்ய வேண்டும்.

ஜங்க் ஃபுட்டை தவிர்த்து ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடுவேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள். எப்போதும் வெந்தது, சுட்டது. பொறித்தது என்று இல்லாமல் கொஞ்சம் பச்சையாக அதாவது காய்கறி சாலட் சாப்பிட ஆரம்பியுங்கள். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அனைத்தும் கிடைத்துவிடும். ஹெல்த்தியாக இருக்கலாம்.

எக்காரணத்தைக் கொண்டும் காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். நீண்ட நேரத்துக்குப் பிறகு சாப்பிடும் உணவு, அன்றைய நாளை தீர்மானிக்கும் உணவு. எனவே, சத்தான உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

தினமும் 6 முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் அருந்துவது கட்டாயம் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். கார்பனேட்டட் பானங்களை தவிர்த்துவிடுங்கள். இப்படி செய்வது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சரியான நேரத்துக்கு தூங்கச் சென்றுவிடுங்கள். குறைந்தது எட்டு மணி நேரமாவது தூக்கம் அவசியம். தூங்கும் நேரத்தில் மொபைலை நோண்ட வேண்டாம். அது தூக்கத்தைத் துரத்திவிடும். சரியான நேரத்துக்கு தூங்கச் செல்வது, காலையில் சரியான நேரத்தில் எழுந்திருப்பதை வழக்கமாக மாற்றுங்கள்.

பொது சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். இது உங்கள் சமூக வாழ்வையும், உங்கள் ஆரோக்கிய வாழ்வையும் மேம்படுத்த உதவும். மன அழுத்தம் தவிர்ப்பதும் மிக முக்கியம்!