ஊக்க மருந்து சர்ச்சை: கோமதி மாரிமுத்துவின் தங்கம் பறிப்பு!!

 

ஊக்க மருந்து சர்ச்சை: கோமதி மாரிமுத்துவின் தங்கம் பறிப்பு!!

கத்தார், தோஹாவில் நடைபெற்ற 23-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார். 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 2.70 விநாடிகள் நேரத்தில் வந்து முதலிடம் பிடித்த அவரை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

gomathi

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியது அண்மையில் தெரியவந்தது. அதாவது தோஹாவில் நடைபெற்ற  ஆசிய போட்டியில் கோமதி மாரிமுத்து அனபாலிக்  ஸ்டெராய்டான நார்ஆண்ட்ரோஸ்டெரோன் என்ற மருந்தை எடுத்துக் கொண்டதால்  ஊக்க மருந்து சோதனையில் ‘பாசிட்டிவ்’ என்று தெரிய வந்ததாகவும் இதனால் கோமதிக்கு 4 வருட காலம் தடை விதிக்கப்படும் என்றும் அவர் வாங்கிய தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.