வானத்திலிருந்து தங்க மழை: அள்ளிச் சென்ற கிராமத்தினர்

 

வானத்திலிருந்து தங்க மழை: அள்ளிச் சென்ற கிராமத்தினர்

குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையம் அருகே உள்ளது ‘தம்மஸ்’ என்ற கிராமம்.சுமார் 500 குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தங்கக் கட்டி மழை பெய்தததாகச் சொல்லப்படுகிறது. நள்ளிரவில் பெய்த இந்த மழையை யாரும் பார்க்கவில்லை.. ஆனால் மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது கிராமத்து தெருக்கள் முழுவதும் தண்ணீர் தேங்கிய நிலையில் சிறியதும் பெரியதுமாக தங்கக் கட்டிகள் கிடந்துள்ளன.

வானத்திலிருந்து தங்க மழை: அள்ளிச் சென்ற கிராமத்தினர்


சிறிய தங்கக் கட்டிகள் வழக்கமான தங்க பிஸ்கட் போலவும், பெரிய தங்க கட்டிகள் செங்கல் அளவிற்கும் இருந்துள்ளன.சாலையில் தங்க கட்டிகள் கிடப்பதைப் பார்த்த சிலரின் சத்தம் கேட்டு ஊர் முழுக்க உள்ளவர்கள் அடித்து புரண்டு வீட்டை விட்டு வெளியே ஒடி வந்தனர். அவர்கள் தங்க கட்டிகளை அள்ளிச் சென்றனர். இதில் சிலருக்கு தங்க செங்கற்கள் கிடைத்தன, சிலருக்கு சிறிய தங்கத் துண்டுகள் கிடைத்தன.

வானத்திலிருந்து தங்க மழை: அள்ளிச் சென்ற கிராமத்தினர்


கிராமத்து தெருக்கள் மட்டுமல்லாமல் அருகில் இருந்த புதர் பகுதியில் இருந்தும் பலர் தங்கக் கட்டிகளைக் கண்டெடுத்தனர். இதற்குள் தங்க மழை குறித்த தகவல் பரவி, அக்கம் பக்கத்து ஊர்க்காரர்களும் ‘தம்மஸ்’ கிராமம் நோக்கி விரைந்தனர். எல்லோரும் பகல் முழுவதும் தங்க் கட்டிகளை சேகரித்த நிலையில் அன்று இரவு முழுவதும் டார்ச் லைட்டுகளுடன் இடை விடாது தேடினர். தங்கம் கிடைத்த பலர் கைக்கு கிடைத்தது போதும் என ஓட்டம் பிடித்தனர். பலர் தங்க கட்டிகள் கிடைக்காமல் கண்ணீர் விட்டனர்.
பொது மக்கள் எல்லோருமே தங்கம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தார்களே தவிர உண்மையில் தங்க மழை பெய்ததா? என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யவில்லை.ஏதாதது தங்க கடத்தல் கும்பல் காவல்துறைக்கு பயந்து தங்க கட்டிகளை வீசிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது குறித்து அதிரடி விசாரணைகள நடந்து வருகின்றன.