கோவையில் ரூ.26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது!

 

கோவையில் ரூ.26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது!

கோவை

சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்திவந்த 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் பயணம் செய்தவர்களையும், அவர்களின் உடமைகளையும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் ரூ.26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது!

அப்போது, சந்கேத்திற்கு உரிய விதமாக இருந்த 2 பயணிகளை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் தங்கத்தை பசை வடிவில் மாற்றி, அதனை ஆசன வாயில் மறைத்து கடத்தியது தெரியவந்தது.

இதனை அடுத்து, இருவரிடமும் இருந்தும் சுமார் 597 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு சுமார் 26 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து முகமது யாசிர் மற்றும் இர்பான் ஆகிய 2 பயணிகளை கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.