நிலத்தில் தங்கப் புதையல்.. விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்?

 

நிலத்தில் தங்கப் புதையல்.. விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்?

தெலுங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தில் இருக்கும் பெம்பார்த்தி கிராமத்தில் வசித்து வருபவர் நரசிம்மாலு. இவருக்கு சொந்தமாக 11 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை சமன்படுத்தும் பணியில் நரசிம்மாலு ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு தங்கப் புதையல் ஒன்று கிடைத்துள்ளது. அவருக்கு கிடைத்த செம்புப் பானையில் தங்க ஆபரணங்கள் இருந்துள்ளது.

நிலத்தில் தங்கப் புதையல்.. விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்?

நரசிம்மாலுவுக்கு தங்கப் புதையல் கிடைத்தது பற்றி அப்பகுதி காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. அதை சோதனை செய்து பார்த்த போது, அதில் 1.7 கிலோ தங்கமும் 187.5 கிராம் வெள்ளிப் பொருட்களும் இருந்துள்ளது. தனது நிலத்தில் கிடைத்ததால் பொருட்கள் அனைத்தும் தனக்கு தான் சொந்தம் என நரசிம்மாலு உரிமைக் கொண்டாட, அப்பகுதி மக்கள் முன்னோர் காலத்தில் கோவிலில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பதால் அவற்றை கோவிலில் தான் வைக்க வேண்டுமென கூறியுள்ளனர். ஆனால், நகைகள் அனைத்தையும் ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த தங்க நகைகளுக்கு பூஜை செய்து வழிபட்ட கிராம மக்கள், அதனை ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளனர். அதை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.