பழமையான கோயிலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க புதையல்!

பழமையான கோயிலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க புதையல்!

குழம்பேஸ்வரர் கோயில் சோழர் காலத்து தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோயிலை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பழமையான கோயிலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க புதையல்!

இந்நிலையில் கோயில் இடிக்கும் பணியின்போது கருவறை அருகே படிகட்டுகளை அகற்றிய போது தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் சோழர் காலத்துத் தங்க நாணயங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் தகவலின் பேரில் கண்டுபிடிக்கப்பட்ட புதையல், உத்தரமேரூர் வருவாய்த்துறையினரிடம் அளிக்கப்பட்டது.

பழமையான கோயிலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க புதையல்!

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க புதையல் கடந்த 16 ஆம் நூற்றாண்டு கால தங்கம் என்று கூறப்படுகிறது . கண்டெடுக்கப்பட்ட நகைகளை மீட்டு கருவூலத்தில் ஒப்படைக்க, மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார்.