’படுக்கை விரிப்புக்குள் தங்கம் கடத்தல்’ 1.45 கிலோ தங்கம் பறிமுதல்

’படுக்கை விரிப்புக்குள் தங்கம் கடத்தல்’ 1.45 கிலோ தங்கம் பறிமுதல்

கொரோனா காலத்தில் பயணம் செய்வதே பெரும் சிக்கலாக இருக்கிறது. ஆனால், கடத்தல் காரர்கள் இதுவே நல்ல தருணம் என கடல் வேலையில் மும்முரமாய் இறங்கிவிட்டார்கள்.

சென்னை விமானநிலையத்தில் அடிக்கடி தங்கம் கடத்துபவர்கள் சிக்குகிறார்கள். இப்போதும் அப்படியாக இரு கேஸ் பிடிபட்டுள்ளது.

’படுக்கை விரிப்புக்குள் தங்கம் கடத்தல்’ 1.45 கிலோ தங்கம் பறிமுதல்

ரகசிய உளவுத் தகவலின் அடிப்படையில், சென்னை விமானநிலைய சுங்கத்துறை துபாயிலிருந்து தனியாக வந்த பொருள்கள் முனையத்தில், ரூ.78.4 லட்சம் மதிப்புள்ள 1.45 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது.

துபாயிலிருந்து முன்பே வந்த பயணி ஒருவர், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம், தனியாக அனுப்பப்பட்ட தனது பொருள்களை எடுத்துச் செல்ல வந்தார். அந்தப் பொருள்கள் அடங்கிய பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் படுக்கை விரிப்புகள், பொம்மைப் பெட்டிகள் மற்றும் சில பொருள்கள் இருந்தன.

’படுக்கை விரிப்புக்குள் தங்கம் கடத்தல்’ 1.45 கிலோ தங்கம் பறிமுதல்

படுக்கை விரிப்புகள் அட்டையால் சுற்றப்பட்டிருந்தது. அதை எடுத்த போது, சம்பந்தமில்லாத வகையில் மிகவும் கனமாக இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்த போது, கார்பன் பேப்பரால் சுற்றப்பட்டு, அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்த தங்கப்பட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல பொம்மைப் பெட்டிகளிலும் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றிலும் தங்கப்பட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

நான்கு பெட்டிகளிலிருந்து, மூன்று படுக்கை விரிப்புகள் மற்றும் ஏழு பொம்மைப் பெட்டிகளில் இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 1.45 கிலோ எடையுள்ள 10 தங்கப்பட்டைகள் 1962-ஆம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.78.4 லட்சம் ஆகும்.

’படுக்கை விரிப்புக்குள் தங்கம் கடத்தல்’ 1.45 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் மின்னியல் பணியாளராக வேலை பார்த்த கள்ளக்குறிச்சியைச் (தமிழகம்) சேர்ந்த அந்தப் பயணி கோவிட்-19 காரணமாக வேலை இழந்தார். அதனால் அவர் அண்மையில் சொந்த ஊருக்கு வந்தார். தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்த அவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • ’படுக்கை விரிப்புக்குள் தங்கம் கடத்தல்’ 1.45 கிலோ தங்கம் பறிமுதல்