தங்கம் கடத்தல் வழக்கு… ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி!

தங்கம் கடத்தல் வழக்கு… ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி!

கேரள அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை என்.ஐ.ஏ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தங்கம் கடத்தல் வழக்கு… ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி!
கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் பெயரில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகம் வரை இந்த கடத்தல் சம்பத்துடன் தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

தங்கம் கடத்தல் வழக்கு… ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி!
ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகியோர் மீது தீவிரவாத நிதி திரட்டல், தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், தீவிரவாத செயலுக்கான கூட்டு வசதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியாக ஸ்வப்னா சுரேஷ் உள்ளார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தங்கம் கடத்தல் வழக்கு… ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி!
இன்று நடந்த விசாரணையின் போது, ஸ்வப்னா சுரேஷ்க்கு எதிராக வலுவான ஆதாரம் உள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று என்.ஐ.ஏ தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் சுவப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.