1.48 கிலோ தங்கம் கடத்தல் – சென்னை விமானநிலையத்தில் இருவர் கைது

 

1.48 கிலோ தங்கம் கடத்தல் – சென்னை விமானநிலையத்தில் இருவர் கைது

கொரோனவால் உலகமே முடங்கி இருந்தாலும் கொள்ளை, கடத்தல் செய்பவர்கள் ஓயமாட்டார்கள் போல. சென்னை விமானநிலையத்தில் சில வாரங்களுக்கு முன் தங்கம் பார்சலில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக சென்னை, பாண்டிச்சேரியில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது இன்னொரு கடத்தல் செய்தவர்கள் பிடிபட்டிருக்கின்றனர்.

1.48 கிலோ தங்கம் கடத்தல் – சென்னை விமானநிலையத்தில் இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் ரூ.82.3 லட்சம் மதிப்புள்ள 1.48 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். செவ்வாய்கிழமையன்று காலை, துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம், சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த கலீல் அகமது என்பவரிடமிருந்து ஒரு பாக்கெட் தங்கப்பசை, சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.15.60 லட்சம் மதிப்புள்ள இந்தத் தங்கத்தின் எடை 280 கிராம் ஆகும்.

1.48 கிலோ தங்கம் கடத்தல் – சென்னை விமானநிலையத்தில் இருவர் கைது

முன்னதாக, திங்கட்கிழமையன்று விமான நிலைய புலனாய்வு அதிகாரிகள், சென்னை விமான நிலையத்திற்கு வெளியே, காஜா மொய்தீன், எஸ் பீர் மொய்தீன் ஆகிய இருவரிடமிருந்து ஐந்து பாக்கெட் தங்கப் பசையை, சோதனையின்போது பறிமுதல் செய்தனர். இந்தப் பாக்கெட்டுகளை, ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வந்த ஐந்து பயணிகள் தம்மிடம் கொடுத்ததாக, விசாரணையின்போது அவர்கள் தெரிவித்தனர். இது ரூ.66.73 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கமாகும். இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.