மலக்குடலில் தங்கம் கடத்திய கும்பல்! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி

 

மலக்குடலில் தங்கம் கடத்திய கும்பல்! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி

கொரோனா உச்சத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தைக் கடத்தல் காரர்கள் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அப்படியான கும்பல் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது.

எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து நேற்று (புதன்கிழமை) சென்னைக்கு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 7 பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகம் எழுந்தது. அதனையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகளால் அவர்கள் சோதனை செய்யப்பட்டனர்.

மலக்குடலில் தங்கம் கடத்திய கும்பல்! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலக்குடலில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களை சோதனையிட்ட போது மலக்குடலில் இருந்து 9 பொட்டலங்களில் பசை வடிவிலான 1.28 கிலோ தங்கமும், அவர்களது கால்சட்டைப் பைகளில் இருந்து 4 தங்கத் துண்டுகளும், 2 தங்க சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ 75.5 லட்சம் மதிப்புள்ள 1.43 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கு முன்பு, செவ்வாய் கிழமை இரவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் சென்னைக்கு வந்த தமிழகத்தை சேர்ந்த 7 பயணிகள் தங்கம் கடத்துவதாக சந்தேகம் எழுந்தது. அதனால், அந்த 7 பேரையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

மலக்குடலில் தங்கம் கடத்திய கும்பல்! – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி

அந்த 7 பேரைச் சோதனையிட்ட போது மலக்குடலில் இருந்து 9 பொட்டலங்களில் பசை வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 1.39 கிலோ 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 72.51 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரு கும்பலையும் சேர்த்து மொத்தம் ரூ 1.48 கோடி மதிப்புள்ள 2.82 கிலோ தங்கம் பிடிபட்டத்து. இதனை சுங்க சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.