அந்த இடத்தில் மறைத்து தங்கம் கடத்தல் – அதிரடி நடவடிக்கையில் கைது

 

அந்த இடத்தில் மறைத்து தங்கம் கடத்தல் – அதிரடி நடவடிக்கையில் கைது

கொரோனா காலத்தில் விமானப் போக்குவரத்து மிகவும் குறைவாகி விட்டது. ஆனாலும் கடத்தல் காரர்கள் ஓய்வதாக இல்லை. தினந்தோறும் யாரேனும் ஒருவராவது கடத்தலில் சிக்கிக்கொள்வதும் கைது ஆவதும் வாடிக்கையாகி விட்டது.

துபாயிலிருந்து புறப்பட்ட IX 1644  விமானம் சென்னையை வந்தடைந்தது. அதில் கடத்தல் சம்பவத்தில் சிலர் ஈடுபட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனால், அதிகாரிகள் கண்காணிப்பையும் சோதனையையும் துரிதப்படுத்தினர்.

அந்த இடத்தில் மறைத்து தங்கம் கடத்தல் – அதிரடி நடவடிக்கையில் கைது

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மத் ஹசன் மாலிக் (28) என்பவரை  விமானநிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் 880 கிராம் எடையில் 3 தங்க பொட்டலங்கள் அவரது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.  அவரிடமிருந்து ரூ. 39.83 லட்சம்  மதிப்பில் 772 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதோடு அவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு நிகழ்வில் துபாயிலிருந்து ஏர் இந்தியா IX 1644 என்ற விமானத்தில் சென்னை வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த 31 வயதான முஹம்மத் அசாருதீன் என்பவர் விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை சோதனையிட்டதில் 72 கிராம் எடையில் தங்க பசை பொட்டலத்தை அவர் உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. 

அந்த இடத்தில் மறைத்து தங்கம் கடத்தல் – அதிரடி நடவடிக்கையில் கைது

மேலும் அவரது கைப்பையில் 57 கிராம் எடையில் ஓர் தங்க வெட்டுத் துண்டும், 36 கிராம் எடையில் 2 தங்க தகடுகளும்  மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து ரூ. 8.44 இலட்சம் மதிப்பில் 165 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் இருவரிடமிருந்தும் மொத்தம் ரூபாய் 48.27 இலட்சம் மதிப்பில் 937 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.  ஒருவர் கைது செய்யப்பட்டார்.