மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தியவர்கள் கைது

 

மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தியவர்கள் கைது

சமீபகாலமாக தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் சென்னை விமான நிலையத்தில் மட்டுமே நான்கைந்து முறைகள் சுங்கத் துறை அதிகாரிகளால் தங்கம் கடத்தல் தடுக்கப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டுள்ளது. தற்போதும் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தியவர்கள் கைது

சனிக்கிழமை இரவு துபாயிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஃப்ளைட்ஸ் துபாய் எஃப் இசட் 8517 விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த இருவரையும், இண்டிகோ 6ஈ 8497 விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரையும் தடுத்து நிறுத்தி அவர்களிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தியவர்கள் கைது

அப்போது தங்கப் பொட்டலங்களை அவர்கள் தங்கள் மலக்குடலில் கடத்தி வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களைச் சோதனையிட்ட போது, ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 4 பொட்டலங்களாக, மொத்தம் 12 தங்கப் பொட்டலங்கள் அவர்கள் மலக்குடலிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர்கள் அணிந்திருந்த கால்சட்டையில் ஒவ்வொருவரிடமும் இருந்து தலா 116 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. அவர்களிடமிருந்து மொத்தமாக 1.32 கோடி ரூபாய் மதிப்பிலான 2.88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.