darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்வு! 

Gold
Gold

சீனாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 

கடந்த வெள்ளியன்று அமெரிக்க படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டார். இதற்குத் பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா தாக்குதலுக்குப் பிறகு கச்சா எண்ணெயின் விலை நான்கு சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. பிரச்னை தொடர்ந்தால் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க நேரிட்டுள்ளது. இதேபோல்  சென்னையில் 22 கேரட் ஆபரத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.31,432க்கு விற்பனையாகிறது. கடந்த  8 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1552 உயர்ந்துள்ளது.

china gold

சீன புத்தாண்டையொட்டி அந்நாட்டு மக்கள் தங்க நகைகளை விரும்பி வாங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளாது.   தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த மாதம் 1 கிராம் தங்கம் 410 யுவானாக இருந்ததாகவும்,  தற்போது 452 யுவானாக அதிகரித்துள்ளதாகவும் சீன மக்கள் கூறுகின்றனர். 453 யுவான் என்பது இந்திய மதிப்பில் ரூ. 4,652. தங்கம் விலை நாளுக்கு நாள்  தொடர்ந்து அதிகரித்து வருவதாக சீன நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.