தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு

 

 தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு

தங்கம் என்றும் அழகு ஆபரணம் என்பதாக ஒரு பக்கம் பார்க்கப்பட்டாலும், அது மிக அதிக லாபம் ஈட்டித்தரும் வணிகமாகவும் கருதப்படுகிறது. அதனால்தான் இந்தக் கொரோனா நோய்த் தொற்று அதிகம் இருக்கும் காலத்தில் பல நாட்கள் பெரிய கடைகள் திறக்க வாய்ப்பில்லை. காரணம், இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பரவ தொடங்கிய மார்ச் மாதத்தில் இறுதியிலிருந்து நாடு முழுக்க லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என எதுவும் திறக்கப்படுவதில்லை.

 தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு

பெரிய அளவில் கடைகள் திறக்கப்படாத நிலையில், தங்கம் விலை வெகுவாகக் குறைந்துவிடக்கூடும் எனச் சிலர் நினைத்தனர். ஆனால், ஆன்லைன் வர்த்தகத்தால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே செய்தது.

ஜூலை 13-ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தில் விலை ரூபாய் 4,696 ஆக இருந்தது. அடுத்த நாள் 5 ரூபாய் குறைந்தது. ஜூலை 15-ம் தேதி 4,713 ரூபாயாக அதிரடியாக அதிகரித்தது. அடுத்த நாளும் விலையில் ஏறுமுகம்தான். ஜூலை 17ம் தேதி மட்டும் சற்று குறைந்து 4,685 ரூபாய்க்கு விற்றது. ஆனால், அதற்கு அடுத்த நாளே 4,703 ரூபாயாக அதிகரித்தது. அடுத்த நாள் (ஜூலை 19) அன்று ஒரு ரூபாய் அதிகரித்து 4,704 ரூபாக்கு விற்றது. நேற்று மீண்டும் சற்று சரிவு கண்டு 4,695 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

 தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு

இன்றைய நிலவரப்படி (ஜூலை 21-ம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தில் ஒரு கிராம் விலை ரூ.4,696-க்கும் ஒரு பவுன் (8 கிராம்) 37,568 ரூபாக்கும் விற்கப்படுகிறது. அதாவது நேற்றைய விலையோடு ஒப்பிடுகையில் ஒரு பவுனுக்கு 10 ரூபாய் அதிகரித்து உள்ளது.

24 கேரட் வகை தங்கம், 1 கிராம் 5,125 ரூபாயாக்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையிலிருந்து ஒரு ரூபாய் அதிகமாகும்.