தங்கம் விலை குறைந்துவிட்டது! பெட்ரோல் எப்போது குறையும்?

 

தங்கம் விலை குறைந்துவிட்டது! பெட்ரோல் எப்போது குறையும்?

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வந்தால் லிட்டர் ரூ.75 தான், ஆனால் அரசுக்கு மனமில்லை என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை குறைந்துவிட்டது! பெட்ரோல் எப்போது குறையும்?

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கிறது. இதனால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என சொல்லிமுடிப்பதற்குள் இரவோடு இரவாக சரக்கு லாரி கட்டணங்களை 30% அளவுக்கு உயர்த்தின. இதனால் மிகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட விண்ணை முட்டும் அளவிற்கு உயர இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வந்தால் லிட்டருக்கு ரூ.75 என்று குறையும், ஆனால் அரசுக்கு ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வர மனம்தான் இல்லை என்று எஸ்பிஐ பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.