ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது!

 

ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,713க்கு விற்பனையாகிறது.

பொருளாதார சரிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பொது முடக்க காலத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது தான். ஊரடங்கு காலத்தில் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிக் கிடந்ததால் வெளிநாடுகளில் மக்கள் தங்கக் காசுகளில் முதலீடு செய்யத் தொடங்கினர். இது தங்க விலை உயர்வில் எதிரொலித்தது.

ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது!

அதன் பிறகு, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பொருளாதார மந்த நிலை குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு குறைந்தது. இதனால் தங்க விலை தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,713க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,704க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.10க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.66,100க்கும் விற்பனையாகிறது.