தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு!

 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு கொரோனா காலகட்டத்தில் அதிகரித்திருந்தது தெரிந்தவையே. பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் பலவற்றில் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். அச்சமயம் தங்கத்தின் தேவை அதிகரித்திருந்ததால், தங்கம் விலை எதிர்பாரத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது. தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பினாலும், தொழில்துறையில் கொரோனா பீதி நிலவுகிறது. இது, தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் எதிரொலிக்கிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு!

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,700க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,600க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,000க்கும் விற்பனையாகிறது.