தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு!

 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 41 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் பெருமளவில் குறைந்திருக்கிறது. கொரோனா காலத்தில் நிலவிய பொருளாதார வீழ்ச்சியும் தொழில்துறை தேக்கமும் முதலீட்டாளர்களின் பார்வையை தங்கத்தின் மீது திசை திருப்பியது. அமெரிக்க டாலர்கள், பங்குச் சந்தை என பலவற்றில் போடப்பட்ட முதலீடுகள் அனைத்தும் தங்கத்தின் மீது போடப்பட்டதால் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி முதலீடுகள் குறைந்திருப்பதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு!

இன்றைய நிலவரத்தின் படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,483க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,864க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,500க்கும் விற்பனையாகிறது.