தங்கம் வாங்க போறீங்களா?.. இது தான் சரியான நேரம்!

 

தங்கம் வாங்க போறீங்களா?.. இது தான் சரியான நேரம்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 குறைந்துள்ளது.

பொதுமுடக்க காலத்தில் எதிர்பாராத அளவுக்கு விலையேற்றத்தைக் கண்ட தங்கம் விலை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரியத் தொடங்கியது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி திசை திருப்பியது. முதலீடுகள் அதிகரிக்க, அதிகரிக்க விலையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. அதன் பிறகு, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

தங்கம் வாங்க போறீங்களா?.. இது தான் சரியான நேரம்!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 குறைந்து ரூ.4,342க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ.34,736க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ரூ.1.60 சரிந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,600க்கும் விற்பனையாகிறது.