சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்தது

 

சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்தது

கொரோனா பாதிப்பினால் உலகம் முழ்வதுமே வர்த்தகம் பாதிகப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மார்ச் மாதம் இறுதி வாரத்திலிருந்து பெரிய நிறுவனங்கள் திறக்கப்படுவதில்லை. சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இயல்பு நிலைக்கு சூழல் மாறவில்லை. இந்த நிலை தங்கம் விற்பனைக்கும் சேர்த்துதான் என்றாலும் ஆன்லைன் வர்த்தகத்தில் தங்கத்திற்கு வரவேற்பு இருப்பதால் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய (ஜூலை14) தேதியில் சென்னையில் விற்கப்படும் ஆபரண தங்கத்தின் விலை சற்று இறக்கம் கண்டுள்ளது.

சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்தது

சென்னையில் கடந்த ஜூலை 5-ம் தேதி 22 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் 4,622 ரூபாய்க்கும் 8 கிராம் ரூபாய் 36,976 விற்கப்பட்டது. இதே விலை அடுத்த நாளான ஜூலை 6-ம் தேதியும் நீடித்தது. ஜூலை 7 -ம் தேதி ஒரு கிராம் 4,626. ருபாக்கும் 8 கிராம் ரூபாய் 37,008 விற்கப்பட்டது. ஜூலை 8 -ம் தேதி ஒரு கிராம் 4,692. ருபாக்கும் 8 கிராம் ரூபாய் 37,536 விற்கப்பட்டது. ஜூலை 9 -ம் தேதி ஒரு கிராம் 4,718. ருபாக்கும் 8 கிராம் ரூபாய் 37,744 விற்கப்பட்டது. ஜூலை 10 -ம் தேதி ஒரு கிராம் 4,706. ருபாக்கும் 8 கிராம் ரூபாய் 37,648 விற்கப்பட்டது.

சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்தது
gold price update in chennai

இப்படி ஆபரணத்தங்க விலையில் ஏற்றப்பட்டிருந்த மாற்றத்தில் நேற்று (ஜூலை 13 -ம் தேதி) ஒரு கிராம் 4,706. ருபாக்கும் 8 கிராம் ரூபாய் 37,648 விற்கப்பட்டது. இந்த விலையில் இன்று சற்று இறக்கம் காணப்பட்டுள்ளது.

இன்றைய (ஜூலை 14) ஆபரணத் தங்கத்தில் விலை 1 கிராம் 4,691 என்றும் 8 கிராம் ரூபாய் 37,528 ஆகவும் விற்கப்படுகிறது. அதாவது நேற்றையை விலையில் ஒரு கிராம்க்கு 15 ரூபாயும் ஒரு சவரன் (8 கிராம்) க்கு 120 ரூபாயும் குறைந்துள்ளது.