அதிரடி சரிவு… ரூ.36 ஆயிரத்தில் தங்கம் விலை!

 

அதிரடி சரிவு… ரூ.36 ஆயிரத்தில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த 2 வாரங்களுக்கு மேலாக ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வருகிறது. பெரிதளவில் மாற்றங்கள் இல்லையெனினும் ஓரிரு நாட்கள் குறைந்தால், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை உயரக்கூடிய நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் ரூ.36,352க்கு விற்கப்பட்டு வந்த தங்கம் விலை நேற்று ரூ.36,240 ஆக குறைந்தது. இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.

அதிரடி சரிவு… ரூ.36 ஆயிரத்தில் தங்கம் விலை!

இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,500க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,000க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,900க்கும் விற்பனையாகிறது.