தொடர் சரிவில் தங்கம் விலை!

 

தொடர் சரிவில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது.

தொடர் சரிவில் தங்கம் விலை!

கடந்த ஆண்டு மே மாதத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது. அப்போது நிலவிய பொருளாதார சரிவும், தொழில்துறை தேக்கமும் விலையேற்றத்துக்கு வித்திட்டது. கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்த தங்கம் விலை, அடுத்தடுத்த மாதங்களில் மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய நாள் முதல் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்களில் ஏற்றத்தைக் கண்டாலும் பெரிதளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

தொடர் சரிவில் தங்கம் விலை!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,364க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து 6 நாட்களாக இறக்கத்தை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.