தங்கம் விலையில் மீண்டும் சரிவு: கிராமுக்கு ரூ.13 குறைவு!

 

தங்கம் விலையில் மீண்டும் சரிவு: கிராமுக்கு ரூ.13 குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால், தங்கம் விலை கிடுகிடுவென ஏற்றத்தைக் கண்டது. கடந்த ஆண்டுன் மே மாதத்தில் தங்கம் விலை சுமார் ரூ.43 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்தது. முதலீடு அதிகரித்தால், தங்கம் விலை ரூ.50 ஆயிரத்தையும் எட்ட வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததால் தங்கம் விலை குறைந்து தற்போது ரூ.37 ஆயிரத்தில் நீடிக்கிறது. நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் குறைந்துள்ளது.

தங்கம் விலையில் மீண்டும் சரிவு: கிராமுக்கு ரூ.13 குறைவு!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.4,792க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.38,336க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,500க்கும் விற்பனையாகிறது.